CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, November 18, 2008

இதயத்தில் பறக்கும் காதல்...





என் ஒட்டுமொத்த
கவிதைகளும்
கண் 'துளி' நீரில்
தத்தளிக்கிறது!

இதயத்தில் பறக்கும்
காதல் விமானம்
இதழ்களில் இறங்க
மறுக்கிறது!

காதல் வந்தபிறகு,
வார்த்தைகள்
வயதுக்கு வந்துவிட்டதா?
தாவணி போட்ட
தமிழுக்கு
அத்தனை வெட்கமா?

உன்
கோபம்-ஆயுத எழுத்து
அதிகம் வேண்டாம்!
உன்
புன்னகை-உயிரெழுத்து
உதடு தொட்டால்
உயிர் மெய்யாகிறது!

கண்ணா
கண்ணீர் கடலில்
காதல் அலைகள்
வேண்டாம்!

இருண்ட பிறகும்
வெள்ளி பூக்க
இறுமாந்திருக்கும்
கருநீல வானமாய்
நம் காதலிருக்கட்டும்!

10 comments:

புதியவன் said...

//காதல் வந்தபிறகு,
வார்த்தைகள்
வயதுக்கு வந்துவிட்டதா?
தாவணி போட்ட
தமிழுக்கு
அத்தனை வெட்கமா?//

அழகான வரிகள். தொடரட்டும் உங்கள் கவிப் பயணம். வாழ்த்துக்கள்.

Maddy said...

வயதுக்கு வந்த பிறகு தான் காதல் வரும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன், இங்கே காதல் வந்ததால் வார்த்தைக்கு வயது வந்து விட்டதை உணர்ந்தேன். புதிய கற்பனை, இன்னும் வரட்டும்

காண்டீபன் said...

//காதல் வந்தபிறகு,
வார்த்தைகள்
வயதுக்கு வந்துவிட்டதா?
தாவணி போட்ட
தமிழுக்கு
அத்தனை வெட்கமா?//

அப்படி தான் போதும்! உங்கள் கவிதை உவமை மிகவும் அருமை.

//உன்
கோபம்-ஆயுத எழுத்து
அதிகம் வேண்டாம்!
உன்
புன்னகை-உயிரெழுத்து
உதடு தொட்டால்
உயிர் மெய்யாகிறது!//
அழகான கற்பனை! மேலும் கவிதைகள் எழுதும் படி விண்ணப்பம்.

ஜியா said...

//காதல் வந்தபிறகு,
வார்த்தைகள்
வயதுக்கு வந்துவிட்டதா?
தாவணி போட்ட
தமிழுக்கு
அத்தனை வெட்கமா?//

Ultimate...

//உன்
புன்னகை-உயிரெழுத்து
உதடு தொட்டால்
உயிர் மெய்யாகிறது!//

:)) Class..

//இருண்ட பிறகும்
வெள்ளி பூக்க
இறுமாந்திருக்கும்
கருநீல வானமாய்
நம் காதலிருக்கட்டும்!//

God one...

intha kavithai moththamaa romba nallaa irunthathu... Keep up the good work...

Anonymous said...

////காதல் வந்தபிறகு,
வார்த்தைகள்
வயதுக்கு வந்துவிட்டதா?//

கற்பனை வித்தியாசமாகவும் ஒட்டு மொத்த கவிதை அழகாகவும் இருக்கிறது :-)

Ravishna said...

/*காதல் வந்தபிறகு,வார்த்தைகள்வயதுக்கு வந்துவிட்டதா?தாவணி போட்டதமிழுக்குஅத்தனை வெட்கமா?*/
நல்ல வரிகள் ஆளுமை திறன்
/*உன்கோபம்-ஆயுத எழுத்துஅதிகம் வேண்டாம்!உன்புன்னகை-உயிரெழுத்துஉதடு தொட்டால்உயிர் மெய்யாகிறது!*/
நல்ல காதல் வரிகள்.


தொடருங்கள் உங்கள் உயிர் மெய் எழுத்துக்களை.
--ரவிஷ்னா

Sanjai Gandhi said...

கவிதைகள் எல்லாமே ரொம்ப நல்லா தானே இருக்கு ப்ரதிபா.. எதாவது திரட்டியில் இணைத்தால் இன்னும் பலர் ரசிப்பார்களே... தமிழிஷில் நான் இணைக்கிறேன். வேறு திரட்டிகளிலும் சேர்த்து விடுங்கள்.

Sanjai Gandhi said...

http://www.tamilish.com/GeneralNews/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D---/

இங்க பாருங்க..

அருள் said...

படித்ததும்... பிடித்து... அழகு.

நான் said...

உங்கள் காதலில் எழுத்துக்களையும் காதலிக்க வைத்திருக்கிறீர்கள்